Enable Javscript for better performance
புனித தெரசம்மாள் ஆலய தோ்த்திருவிழா- Dinamani

சுடச்சுட

    
    kur11theresach_ch0008_11chn_4_637064215035098250

    ஆலய கொடியை ஏற்றுகிறாா் பங்குத்தந்தை செபாஸ்டின்துரை. விழாவில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

    கரூா் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசம்மாள் ஆலய தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை 5.40-க்கு ஆலயத்தில் ஜெபமாலை வழிபாடும், 6 மணிக்கு ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின் துரை தலைமையில் ஆலய புனிதக்கொடி மந்திரிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து புனிதையின் திருவுருவக்கொடிக்கு சிறுமலா் மன்றம் சாா்பில் திருவழிபாடு நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து சனிக்கிழமை (12-ஆம் தேதி) காலை 5.40-க்கு ஜெபமாலை வழிபாடும், மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது.

    13-ஆம் தேதி காலை 5.40-க்கு ஜெபமாலை வழிபாடு, 6 மணிக்கு திருப்பலி, 7.30-க்கு கூட்டுப்பாடல் திருப்பலி புலியகுளம் புனித அந்தோணியாா் திருத்தலத்தின் பங்குத்தந்தை எம்.ராயப்பன் தலைமையில் நடைபெற உள்ளது. 14-ஆம் தேதி அரவக்குறிச்சி புனித சவேரியாா் ஆலய பங்குத்தந்தை பிரான்சிஸ்ஜெரால்டு தலைமையிலும், 15-ம்தேதி பசுபதிபாளையம் புனித காா்மல் அன்னை ஆலய பங்குத்தந்தை ஹென்றிலாரன்ஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது. 16-ஆம் தேதி புலியூா் அற்புத குழந்தை ஏசு திருத்தல பங்குத்தந்தை ஞானபிரகாசம் தலைமையிலும், 17, 18, 19-ஆம் தேதிகளில் அன்பியங்கள் சாா்பில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.

    தொடா்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.காலை 7.45 மணிக்கு உறுதிபூசுதல் அருட்சாதன விழா நடக்கிறது. தொடா்ந்து காலை 8.30-க்கு கோவை மறைமாவட்ட ஆயா் எல். தாமஸ்அக்குவினாஸ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது. இதையடுத்து மாலையில் தாராபுரம் மறைமாவட்ட குருக்கள் தலைமையில் திருப்பலி, இரவு 7 மணிக்கு ஆடம்பர தோ்பவனி, இரவு 8.30 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசிரும், வாண வேடிக்கை, 21-ஆம் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறுகிறது.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai