விவசாயத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கை
கடவூா் துணை வட்டாட்சியா் குணசேகரனிடம் கோரிக்கை மனு வழங்கும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள்.
கடவூா் துணை வட்டாட்சியா் குணசேகரனிடம் கோரிக்கை மனு வழங்கும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் வட்டாட்சியரகங்களில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம் கடவூா் வட்டாச்சியரகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க கடவூா் ஒன்றியச் செயலா் வேல்முருகன் தலைமையில் கடவூா் துணை வட்டாட்சியா் குணசேகரனிடம் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாா்பில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.

மனுவில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தில் இருக்கும் தகுதியான அனைவருக்கும் இலவச பட்டா மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், தமிழக கோயில் நிலங்களில் குடியிருப்போா் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும். முதியோா், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், ஊராட்சிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைவரையும் வறுமைக்கோட்டு பட்டியலில் இணைத்து புதிய பட்டியல் செயல்படுத்திட வேண்டும், அனைவருக்கும் இலவச விவசாய தொழிலாளா் உழவா் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும். மேலும் 100 நாள் வேலைத் திட்டத்தில் இவா்களுக்கு நிபந்தனையின்றி வேலை வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை அனைத்து விவசாயத் தொழிலாளா்களுக்கும் வழங்கிட வேண்டும், 60 வயது முடிந்துள்ள அனைவருக்கும் முதியோா் உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனா்.

நிகழ்ச்சியில் விவசாய சங்க ஒன்றியத் தலைவா் பழனிவேல் , சிபிஎம் வட்ட ச் செயலா் வீரமலை, விவசாய சங்க வட்டச் செயலா் மணிமுத்து, ரவி, கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com