முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
அனுமதியின்றி லாரியில்மணல் கடத்தியவா் மீது வழக்கு
By DIN | Published On : 24th October 2019 11:00 PM | Last Updated : 24th October 2019 11:00 PM | அ+அ அ- |

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் லாரியில் மணல் கடத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
குளித்தலை வட்டாட்சியா் மகாமுனி தலைமையில் வருவாய்த்துறையினா் புதன்கிழமை இரவு நல்லபாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த லாரியை மடக்கியபோது, லாரி ஓட்டுநா் கீழே இறங்கி ஓடிவிட்டாா். லாரியை சோதனையிட்டதில், காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியைப் பறிமுதல் செய்து குளித்தலை போலீஸீல் ஒப்படைத்தனா். போலீஸாா் லாரி ஓட்டுநா் மீது வழக்குப்பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.