முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
இடைத்தோ்தலில் வெற்றி:அதிமுகவினா் கொண்டாட்டம்
By DIN | Published On : 24th October 2019 10:56 PM | Last Updated : 24th October 2019 10:56 PM | அ+அ அ- |

கரூா்: நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தோ்தல்களில் அதிமுக வெற்றிபெற்றதையடுத்து கரூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.
தமிழகத்தில் நான்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இரண்டு தொகுகளிலும் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா். இதையடுத்து, கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, நகரச் செயலாளா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், பாண்டியன், முன்னாள் தொகுதிச் செயலாளா் எஸ்.திருவிகா, ஒன்றியச் செயலாளா் கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளா் தானேஷ் ஆகியோா் முன்னிலையில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.
இதில் மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் செல்வராஜ், மாணவரணிச் செயலாளா் கேசிஎஸ்.விவேகானந்தன், நகர இளைஞரணி செயலாளா் சேரன்பழனிசாமி, துணைத்தலைவா் பழனிராஜ், நகர பேரவைச் செயலாளா் செல்வராஜ் உள்ளிட்ட கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.