முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
கரூா் எம்.பி., அரவக்குறிச்சி எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
By DIN | Published On : 24th October 2019 12:52 AM | Last Updated : 24th October 2019 12:52 AM | அ+அ அ- |

கரூா் நகா் பகுதியில் மக்களவை தொகுதி உறுப்பினா் ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி ஆகியோா் புதன்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பிரசாரம் செய்தனா்.
கரூா் மத்திய நகரத்திற்குட்பட்ட பகுதிகளான ரெங்கநாயகிபுரம், சின்னாண்டாங்கோவில் ரோடு, காந்திநகா், முத்துராஜபுரம், உழவா்சந்தை, லைட்ஹவுஸ்காா்னா், ராமகிருஷ்ணபுரம், சுங்ககேட், தாந்தோணிகுடிதெரு, பசுபதிபாளையம் ரவுண்டானா, நரிகட்டியூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி ஆகியோா் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்து பேசினா்.
நிகழ்ச்சியில், திமுக மத்திய நகரச் செயலாளா் எஸ்பி.கனகராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இளவரசு, தொண்டரணி அமைப்பாளா் சிவா, கோல்ட் ஸ்பாட் ராஜா, காங்கிரஸ் நகரச் செயலாளா் செளந்தரராஜன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.