அமராவதி பாலம் முதல் வெங்கக்கல்பட்டி வரை: ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் எல்.ஈ.டி விளக்குகள் அமைக்கப்படும்

சாலை பாதுகாப்பு நிதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கரூர் அமராவதி பாலம் முதல் வெங்கக்கல்பட்டிவரை உள்ள சாலையில் எல்.ஈ.டி பல்புகள் மூலம் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார் போக்குவரத்து துறை அமைச்சர்

சாலை பாதுகாப்பு நிதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கரூர் அமராவதி பாலம் முதல் வெங்கக்கல்பட்டிவரை உள்ள சாலையில் எல்.ஈ.டி பல்புகள் மூலம் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 
கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம், திண்ணப்பா நகர் மற்றும் முத்தாலடம்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை முதல்வரின் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மேலும் பேசியது: 
கரூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.145 கோடியில் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை இணைக்கும் நெரூர் - உன்னியூர் பாலம் என எண்ணற்ற திட்டங்களை  முதல்வர் அளித்து வருகிறார். மேலும், நெரூர், குளித்தலை பகுதிகளில் கதவணை கட்டும் ஆய்வு பணிக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5 டி.எம்.சி நீர் தேக்கிவைக்கக்கூடிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருக்கும்.  
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பில் சுமார் 48,500 குடிநீர் இணைப்புகளுக்கு புதிய குழாய் அமைக்கப்பட்டு மீட்டர் பொருத்தும் பணி நடைபெறுகிறது.  தாந்தோணி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு நிதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கரூர் அமராவதி பாலம் முதல் வெங்கக்கல்பட்டிவரை உள்ள சாலையில் எல்.ஈ.டி பல்புகள் மூலம் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. கரூர் மாவட்ட ஏழை பெண்களின் திருமாங்கல்யத்திற்கு ஒரு பவுன் தங்கம் வழங்க நடப்பாண்டில் 2000 பவுன்கள் தயாராய் உள்ளது. இதேபோல், 2018 -19 நிதியாண்டில் 1535 பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தாந்தோணி அரசு கலைக்கல்லூரி முன்புறம் ரூ.15 லட்சத்தில் நிழற்குடை அமைப்பதற்கான பூமிபூஜை பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் கரூர் நகராட்சிக்குட்பட்ட16, 22 , 44, 46 ஆகிய வார்டுகளிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன்,  வட்டாட்சியர்கள் அமுதா, ஈஸ்வரன்,தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் பசுவை சிவசாமி, நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் வை.நெடுஞ்செழியன், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் விசிகே.ஜெயராஜ், கூட்டுறவு சங்கப் பிரதிநிதி தானேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com