தனியார் பெயரில் உள்ள கோயில் நில பட்டாவை மாற்றக்கோரி மக்கள் மறியல்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் தனி நபரின் பெயரில் உள்ள கோயில் நிலத்தின் பட்டாவை மாற்ற வேண்டும் என கிராமமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் தனி நபரின் பெயரில் உள்ள கோயில் நிலத்தின் பட்டாவை மாற்ற வேண்டும் என கிராமமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் வட்டத்துக்குள்பட்ட பாப்பக்காபட்டி ஊராட்சியில் உள்ளது குப்பையம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் நிலம் தனியார் ஒருவரது பெயரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி கிராமமக்கள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதில் சிக்கல் ஏற்பட்டதாம். இதனால் தனி நபரின் பெயரில் உள்ள கோயில் நிலத்தின் பட்டாவை மாற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தார்களாம். இந்நிலையில், இதுதொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பழனி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் திடீரென கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாயனூர் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் பழனி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டாட்சியர் பழனி, இப் பிரச்னை தொடர்பாக குளித்தலை கோட்டாட்சியரை சந்தித்து முறையிடுங்கள் எனக் கூறி பரிந்துரை கடிதம் வழங்கினார். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com