சுடச்சுட

  

  தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு கரூரில் அவரது படத்திற்கு புதிய தமிழகம் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  பரமக்குடியில் புதன்கிழமை தியாகி இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு கரூரில் பல்வேறு அமைப்பினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் அசோகன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
  கரூர் நகரச் செயலர் சோமசுந்தரம், மாவட்ட அவைத் தலைவர் சந்தானம், மாவட்ட மாணவரணி செயலர் சுபாஷ், தாந்தோணி ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்டத்தலைவர் மாரியப்பன் தலைமையில் பேருந்துநிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன் இமானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்தனர். மாநில செய்தித்தொடர்பாளர் வழக்குரைஞர் ரகுநாதன், இளைஞரணி செயலாளர்கள் ராஜலிங்கம், இளவழகன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  மாலை அணிவித்த பின் எஸ்சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரை நீக்க வேண்டும். 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai