சுடச்சுட

  

  குறுவட்ட தடகளப் போட்டிகளில் பி.ஏ.வித்யாபவன் பள்ளி சாம்பியன்

  By DIN  |   Published on : 13th September 2019 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சின்னதாராபுரம் குறுவட்ட தடகளப் போட்டியில் கரூர் பி.ஏ.வித்யாபவன் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 
  பள்ளி கல்வித்துறை சார்பில் 2019-20-ம் ஆண்டிற்கான சின்னதாராபுரம் குறுவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் அண்மையில் கரூரில் நடைபெற்றன. 
  இதில் கரூர் பி.ஏ.வித்யாபவன் பள்ளி 128 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 
  இதில் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மாணவி அனுசியா 200 மீ. ஓட்டத்தில் முதலிடம், ஆர்கே. நவநிதா 600மீ., 400மீ. ஓட்டத்தில் முதலிடம், வர்ஷினி குண்டு எறிதலில் முதலிடம், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவி நேஹா 800மீ. ஓட்டத்தில் முதலிடம், தர்ஷினி 1500மீ., 3000மீ. ஓட்டத்தில் முதலிடம், கீர்த்திகா மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடம், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவி வினிதா 3000 மீ. ஓட்டத்தில் மூன்றாமிடம், நாகமணி மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடம், சோபிகா உயரம் தாண்டுதலில் முதலிடம் பிடித்தனர். 
  19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ரமேஷ் அரவிந்த் 15 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். 
  மேலும் பல்வேறு பிரிவுகளில் முதல்,   இரண்டாமிடம் பிடித்தனர். சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளியின் தலைவர் பி. அம்மையப்பன், துணைத் தலைவர் பி. கணேசன், பள்ளிச் செயலர் சுமதி சிவக்குமரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர் எஸ். சுகுமார், இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai