முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும்  ரூ.15.23 கோடி உதவித் தொகை

கரூர் மாவட்டத்தில் மட்டும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் 29,566 பேருக்கு மாதாந்திர

கரூர் மாவட்டத்தில் மட்டும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் 29,566 பேருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.15,23,32,260 வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  
கரூர் மாவட்டத்தில் 2019- 2020-ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 15,560 பயனாளிகளுக்கு ரூ. 8,01,99,660-ம், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை திட்டத்தின்கீழ்  3,065  பயனாளிகளுக்கு ரூ. 1,57,75,850-ம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 585 பயனாளிகளுக்கு ரூ.30,11,820-ம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 3,601 பயனாளிகளுக்கு ரூ.1,85,52,860-ம், ஆதரவற்ற விதவை உதவித்தொகை திட்டத்தின்கீழ் 4,082 பயனாளிகளுக்கு ரூ.2,10,06,080-ம், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் 1,596 பயனாளிகளுக்கு ரூ.82,28,620 வழங்கப்பட்டு வருகிறது.
50 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத முதிர்கன்னிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 251 பயனாளிகளுக்கு ரூ.12,91,720,  முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 666 பயனாளிகளுக்கு ரூ.34,40,620-ம், அகதிகள் முகாமில் உள்ள விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 66 பயனாளிகளுக்கு ரூ.3,40,930, அகதிகள் முகாமில் உள்ள முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 89 பயனாளிகளுக்கு ரூ.4,58,350, 
அகதிகள் முகாம் மாற்றுதிறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.25,750 என 29,566 பயனாளிகளுக்கு ரூ,15,23,32,260 மாதந்தோறும் ஓய்வூதிய உதவித்தொகையாக வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com