Enable Javscript for better performance
"தூய்மை இந்தியா இயக்கத்தில் 10 கோடி தனிநபர் கழிப்பிடங்கள்'- Dinamani

சுடச்சுட

    

    "தூய்மை இந்தியா இயக்கத்தில் 10 கோடி தனிநபர் கழிப்பிடங்கள்'

    By DIN  |   Published on : 14th September 2019 08:57 AM  |   அ+அ அ-   |    |  

    தூய்மை இந்தியா இயக்கத்தில் நாடு முழுவதும் 10 கோடி தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் கே. தேவிபத்மநாபன் தெரிவித்தார்.
    மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் நடைபெற்ற தூய்மை இந்தியா இயக்கம், நீர் மேலாண்மை இயக்கம், உடல் திறன்மிகு இயக்கம்  மற்றும் காந்தியடிகளின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
    தூய்மை இந்தியா இயக்கம் கடந்த 2014 அக். 2-ல் தொடங்கி காந்தியடிகளின் 150 பிறந்தநாளான வரும் அக்.  2- ல் நிறைவடைகிறது. தூய்மை இந்தியா இயக்கத்தில் நாடு முழுவதும் 10  கோடி தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தின் மூலம் நாட்டில் 6 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத கிராமங்களாக மாறியுள்ளன.  தூய்மை இந்தியா இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியதால் நாட்டில் 34 மாநிலங்களில் 698  கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நோய்களைத் தடுக்க தூய்மை மிகவும் அவசியம் என்ற நோக்கத்தில்தான் மத்திய அரசு இந்த இயக்கத்தை செயல்படுத்தியது என்றார்.
    தொடர்ந்து கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா பேசுகையில்,  அரசு உதவியுடன் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பிடங்களை மக்கள் முறையாகப் பயன்படுத்தவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் லோகேஷ், கரூர் மாவட்ட தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ்,  மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஊராட்சி செயலர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    முன்னதாக தாந்தோணி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஊராட்சி மக்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா நீர் மேலாண்மை இயக்க விழிப்புணர்வு பேரணி ஆண்டான்கோயில் கிழக்கு ஊராட்சியில் நடைபெற்றது. 

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp