புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
 பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், செளபாக்கியம் கிடைக்கவும் புரட்டாசி மாதத்தில் இருக்கும் விரதம் மிகவும் சிறந்தது என்பது ஐதீகம். புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.  அந்த வகையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையில் கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், சேங்கல் வரதராஜ பெருமாள் கோவில், கரூர் பண்டரிநாதன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
தென்திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வெங்கடரமண சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். 
கோயிலுக்கு கரூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். 
சேங்கல் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் வரதராஜ பெருமாள் சுவாமி, பூதேவி, ஸ்ரீதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com