Enable Javscript for better performance
விபத்தில் கோயில் பூசாரி  சாவு- Dinamani

சுடச்சுட

    

    தோகைமலை அருகே கொசூரில் ஜீப் மோதி கோயில் பூசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    கரூர் மாவட்டம், கீரனூரைச் சேர்ந்தவர் ராமசாமி (65). இவர் கீரனூரில் உள்ள மலையாள கருப்பசாமி கோயில் பூசாரியாக இருந்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்திற்கு, கொசூர் கொத்தமல்லிமேடு அருகேயுள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பினார். 
    தொடர்ந்து, ஊர் திரும்புவதற்காக, நெடுஞ்சாலைக்கு வந்த அவரது வாகனம் மீது ஜீப் ஒன்று மோதியது. இதில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக, ஜீப் ஓட்டுநர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையை சேர்ந்த பீர்புகாரி மகன் அப்துல்கனி (27) என்பவர் மீது தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai