பெரியகுளத்துப்பாளையம் சுரங்க வழிப்பாதை திறப்பு

கரூரில் ரூ.6.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியகுளத்துப்பாளையம் சுரங்க வழிப்பாதையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

கரூரில் ரூ.6.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியகுளத்துப்பாளையம் சுரங்க வழிப்பாதையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்தார். விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது:
கரூர் நகராட்சிக்கு உள்பட்ட பசுபதிபாளையம் மற்றும் பெரியகுளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுரங்க வழிப்பாதை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இந்த இரு சுரங்கப் பாதைகளுக்கும் ரூ.13.20 கோடி நிதி ஒதுக்கினார். அதனடிப்படையில் பசுபதிபாளையம் சுரங்கப்பாதை ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பெரியகுளத்துப்பாளையம் சுரங்கப்பாதை தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. இந்தப் பாதையானது, கரூர் நகரின் ஆயத்த ஆடை உற்பத்தி பகுதிகளாகக் கருதப்படும் ராமகிருஷ்ணபுரம், காமராஜபுரம், செங்குந்தர்புரம் ஆகிய பகுதிகளையும், வாங்கபாளையம், குளத்துப்பாளையம், வெங்கமேடு ஆகிய பகுதிகளையும் இணைக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
மேலும், சுரங்கப்பாதையில் சென்றால், சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையை அடைய முடியும் என்றார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, நகராட்சிகளின் சேலம் மண்டல நிர்வாக இயக்குநர் ப.அசோக்குமார், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ். திருவிகா, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் பேங்க் இரா.நடராஜன், அமராவதி மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வை.நெடுஞ்செழியன், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் விசிகே.ஜெயராஜ், கரூர் நகர பேரவைச் செயலாளர் வி.செல்வராஜ்,  நகராட்சி ஆணையர் (பொ) திரு.இராஜேந்திரன், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசாமி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com