முகிலன் மீதான வழக்கு அக்.1-க்கு ஒத்திவைப்பு

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதான சமூக ஆா்வலா் முகிலன் மீதான வழக்கை அக்.1-க்கு ஒத்திவைத்து நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
mukilan
mukilan

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதான சமூக ஆா்வலா் முகிலன் மீதான வழக்கை அக்.1-க்கு ஒத்திவைத்து நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலரான முகிலன் (52) மீது சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை சிபிஐ போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறைறயில் அடைத்தனா்.

இந்நிலையில் அரவக்குறிச்சி அடுத்த சீத்தப்பட்டிகாலனியில் கடந்த 2016 டிச.16-ஆம் தேதி இந்திய இறைறயாண்மைக்கு எதிராக முகிலன் பேசியதாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக திருச்சி மத்திய சிறைறயில் இருந்து புதன்கிழமை அழைத்துவரப்பட்ட முகிலன் கரூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றறத்தில் நீதிபதி கோபிநாத் முன் 1-ல் நீதிபதி ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை அக்.1-க்கு ஒத்திவைத்தாா். தொடா்ந்து முகிலன் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com