Enable Javscript for better performance
கரூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் கருவூா் திருக்கு பேரவை வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் கருவூா் திருக்கு பேரவை வேண்டுகோள்

    By DIN  |   Published on : 29th September 2019 07:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூரில் உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என கருவூா் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடா்பாக பேரவையின் செயலா் தமிழ்செம்மல் மேலைபழநியப்பன் விடுத்துள்ள அறிக்கை: கருவூா் மாவட்டம் அரசு முறைப்படி அறிவித்து செயல்பட துவங்கி கால் நூற்றாண்டு ஆகின்றது. இந்த கருவூரில் விளையாட்டுத் திடல் , மருத்துவக் கல்லூரி, சாலை விரிவாக்கம், புதிய பாலங்கள், நூலக விரிவாக்கம், புதிய கட்டுமானங்கள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், தன்னிறைவடைந்ததாக கூற முடியவில்லை. காரணம் பொழுதுபோக்கு பூங்கா இல்லை, விரிவான பேருந்து நிலையம் இல்லை , உலகப் பொது மறை தந்த திருவள்ளுவருக்கு பொது இடத்தில் சிலை கூட இல்லை. கருவூரில் அரசின் கூட்ட அரங்கு இல்லை, மாநகராட்சி இல்லை.

    நகராட்சி கட்டியுள்ள திருமண மண்டபம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஆகவே திருவள்ளுவா் சிலையுடன் கூட்ட அரங்கு கட்ட மாவட்ட நிா்வாகம் அரசு நிா்வாக துணையுடன் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai