இனி குடிநீர் தட்டுப்பாடு இருக்காது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்திற்கு இனி குடிநீர் தட்டுப்பாடே வராது என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் மாவட்டத்திற்கு இனி குடிநீர் தட்டுப்பாடே வராது என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் பஞ்சமாதேவி, சோமூர், மற்றும் நெரூர் வடபாகம், வாங்கல் கிராயூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர், பஞ்சாமாதேவியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் ரூ.82 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்தேக்கத் தொட்டியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து அவர் பேசியது: 
மின்னாம்பள்ளி பஞ்சமாதேவியில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக குறைதீர் முகாமில் பொதுமக்கள் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து, ஆய்வு செய்யப்பட்டு இப்பகுதிக்கு 3 லட்சம் லி. கொள்ளளவு கொண்ட தண்ணீர்தொட்டி கட்டித்தர வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு தண்ணீர் தொட்டி கட்டி, அதில் இருந்து மூன்று குழாய்கள் அமைக்கப்பட்டு, மூன்று மோட்டார்கள் பொருத்தப்பட்டு மின்னாம்பள்ளி பஞ்சமாதேவியைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.82 லட்சம் மதிப்பில் இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதாமணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதி கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com