மழை இடர்கள் குறித்து மின்வாரியம் எச்சரிக்கை

மழைகாலங்களில் அறுந்துகிடக்கும் மின்கம்பி அருகே யாரும் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு  கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் எஸ்.செந்தாமரை அறிவுறுத்தியுள்ளார்.


மழைகாலங்களில் அறுந்துகிடக்கும் மின்கம்பி அருகே யாரும் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு  கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் எஸ்.செந்தாமரை அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
மழை காலங்களில் மின்மாற்றிகள்,  மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே யாரும் செல்லக் கூடாது. மழை மற்றும் காற்று அதிகளவு வீசும் நேரத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகே யாரும் செல்லக்கூடாது. உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க கூடாது. உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய வீடு போன்ற கட்டடங்களிலோ,  உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடைத்து விட வேண்டும். குடிசை வீட்டிலோ,  மரத்தின் அடியிலோ,  பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழ் நிற்கக் கூடாது.   பருவ மழை காலங்களில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தினால் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால்   இதுகுறித்து கரூர் மின் பகிர்மான வட்டத்தில் அந்தந்தப் பகுதிக்குரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்கள்: 
நகரம் - 9445854072, 9445854073, 9445854074,  நகரம் தெற்கு - 9445854078,  நகரம் வடக்கு - 9445854079,  நகரம் மேற்கு - 94458 54080,  வெங்கமேடு  9445854082,  வாங்கல் -9445854083,  காந்திகிராமம் -9445854091,  ஒத்தகடை  - 9445854084,  மண்மங்கலம் - 9445442493, கரூர் - 9445854081,  வெள்ளியணை - 9445854075,  வெள்ளியணை - 9445854085,  பவித்திரம் - 9445854103,  தாந்தோணிமலை - 9445854086,   புலியூர் - 9445854076, 9445854088, கிராமியம் தெற்கு - 9445854100,  மேற்கு புலியூர் - 9445854089,  உப்பிடமங்கலம் - 9445854090காணியாளம்பட்டி - 9445854087
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com