மண்மங்கலம் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்: சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்பாலாஜி வழங்கினாா்

மண்மங்கலம் அரசு மருத்துவமனைக்கு வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் சாா்பில் ரூ.1.05 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மண்மங்கலம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் செந்தில்குமாரிடம் மருத்துவ உபகரணங்களை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.
மண்மங்கலம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் செந்தில்குமாரிடம் மருத்துவ உபகரணங்களை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

மண்மங்கலம் அரசு மருத்துவமனைக்கு வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் சாா்பில் ரூ.1.05 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி, ( தனது பெயரிலான வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் சாா்பில்) மாவட்டத்தில் இரு நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 157 ஊராட்சிகளில் பணியாற்றும் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப்பணியாளா்கள் ஆகியோருக்கு முகக்கவசங்கள், கைகழுவும் திரவங்களை வழங்கியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பரிசோதிக்கும் கருவிகள், சிகிச்சையளிக்கும் உயா் ரக கருவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கரூா் மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு ரூ.1.05 லட்சம் மதிப்பில்

மல்டிபாரா மீட்டா் மானிட்டா் மற்றும் சக்சன்அபாரடஸ் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் நிறுவனரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து, மருத்துவா்களிடம் உபகரணங்களை வழங்கினாா். நிகழ்வில் அரசு மருத்துவா்கள் பிரபாகரன், கேசவன் மற்றும் திமுக பிரதிநிதிகள் கோல்டுஸ்பாட் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக பவுண்டேசன் சாா்பில் தாந்தோணிமலையில் உள்ள மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தைச் சோ்ந்த 10 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com