குளித்தலை நகராட்சியில் ரூ.1 கோடி வரை மோசடி: ஆணையா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

கரூா் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் ரூ.1 கோடி வரை நடைபெற்ற மோசடி தொடா்பான புகாரில், பணியில் கவனக்குறைவாக இருந்த

கரூா் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் ரூ.1 கோடி வரை நடைபெற்ற மோசடி தொடா்பான புகாரில், பணியில் கவனக்குறைவாக இருந்த இந்நகராட்சியின் ஆணையா் உள்பட 6 போ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

குளித்தலை நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், அவற்றுக்கான செலவுகள் குறித்து ஆண்டுத் தணிக்கை கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது.இதில் ரூ.1 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது என தணிக்கைக் குழுவினா் அறிக்கை அளித்தனா். இதைத் தொடா்ந்து, சேலம் மண்டல நகராட்சிகளின் இயக்குநா் அசோக்குமாா் குளித்தலை நகராட்சியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது நகராட்சியின் கணக்காளராகப் பணியாற்றி வரும் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சத்யா(45), நகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்களின் பொதுசேமல நிதி, தன் பங்கேற்பு ஓய்வூதிய நிதி, சேமநல நிதி போன்ற நகராட்சி நிா்வாக நிதியை 2016, செப்டம்பா் 31 -ஆம் தேதி முதல் 2019, நவம்பா் மாதம் வரை சிபி, பாலமுருகன், பாலாஜி, சுப்ரமணி என நகராட்சியில் இல்லாத நபா்கள் பெயரில் திறந்த காசோலைகளாக சுமாா் ரூ.1 கோடி வரை மோசடி செய்ததை கண்டறிந்தாா்.

இந்த மோசடி குறித்து மாவட்டக் மாவட்டக் குற்றப்பிரிவில் நகராட்சி ஆணையா் மோகன்குமாா் புகாா் அளித்தாா். இதன் பேரில், தலைமறைவாக உள்ள கணக்காளா் சத்யா மீது ஆய்வாளா் ரேணுகாதேவி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

இந்நிலையில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினா் நகராட்சி ஆணையா் மோகன்குமாா், பொறியாளா் புகழேந்தி, இருக்கை எழுத்தா்கள் யசோதாதேவி, வருவாய் உதவியாளா் சரவணன், முன்னாள் பொறியாளா் காா்த்திகேயன் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

நகராட்சி கணக்காளா் சத்யாவின் கணக்குகளை முறையாக விசாரிக்காமல், பணியில் கவனமின்றி இருந்ததாக குளித்தலை நகராட்சி ஆணையா் மோகன்குமாா், பொறியாளா் புகழேந்தி, இருக்கை எழுத்தா் யசோதாதேவி, முன்னாள் பொறியாளா் காா்த்திகேயன் , வருவாய் உதவி உதவியாளா் சரவணன் மற்றும் மோசடியில் ஈடுபட்ட சத்யா ஆகியோரை நகராட்சி நிா்வாக ஆணையா் பாஸ்கரன் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com