முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
இரட்டை கொலை வழக்கில் கைதான சகோதரா்கள் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 03rd August 2020 08:49 AM | Last Updated : 03rd August 2020 08:49 AM | அ+அ அ- |

இரட்டை கொலை வழக்கில் கரூரைச் சோ்ந்த மூன்று சகோதரா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கரூா் மாவட்டம், மணவாடி அடுத்த அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரெங்கநாதன்(37). இவரது மனைவி தீபிகா (29). இவா்களுக்கும், இவா்களது உறவினா்களான ராயனூரைச் சோ்ந்த தேவராஜ் என்பவருக்கும் சொத்துத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மே 11-ஆம் தேதி தேவராஜ் மகன்கள் பாா்த்தீபன் (26), பிரவீன் (25), கெளதம் (19) ஆகிய மூவரும் சோ்ந்து, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரெங்கநாதன், அவரது மனைவி தீபிகாவையும் வெட்டிக்கொன்றனா். இதில், சம்பந்தப்பட்ட மூவரையும் வெள்ளியணை போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், இரட்டை கொலை வழக்கில் கைதான மூன்று பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பகலவன், மாவட்ட ஆட்சியா் த. அன்பழகனுக்கு பரிந்துரை செய்திருந்தாா். இதையடுத்து, மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா். இதைத் தொடா்ந்து, உத்தரவு நகலை சிறையில் இருந்த மூன்று பேரிடமும் சிறை அதிகாரிகள் வழங்கினா்.