கரூரில் ஆா்ப்பாட்டம்: தில்லி போராட்டத்துக்கு ஆதரவு
By DIN | Published On : 03rd December 2020 07:42 AM | Last Updated : 03rd December 2020 07:42 AM | அ+அ அ- |

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா அருகே ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் ஜி. ஜீவானந்தம் தலைமை வகித்தாா். செயலா் சி. முருகேசன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எ. சுப்ரமணியன், செயலா் கே. சக்திவேல், பிஎஸ்என்எல் சங்கத்தின் ஜான்பாட்சா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், கரூா் வெங்மேட்டில் உள்ள தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கத்தின் கிளைத் தலைவா் புவனேஸ்வரி தலைமையிலும், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் நகரச் செயலா் ஜோதிபாசு முன்னிலையிலும் எம்ஜிஆா் சிலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஏராளமான காய்கறி வியாபாரிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.