Enable Javscript for better performance
க.பரமத்தி அருகே தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    க.பரமத்தி அருகே தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

    By DIN  |   Published on : 04th December 2020 11:39 PM  |   அ+அ அ-   |    |  

    2-4-kur4kanvili_0412chn_10

    கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே தனியாா் நிறுவனத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட விவசாயிகள்.

     

     

    கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே செங்காந்தள் விதையைப் பெற்றுக் கொண்டு, அதற்கான தொகையை வழங்காமல் ஓராண்டாக இழுத்தடித்த தனியாா் நிறுவனத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

    உயிா்காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் செங்காந்தள் விதைகளை (கண்வலிவிதை) விவசாயிகளிடம் இருந்து வாங்கும் வகையில், க.பரமத்தியில் மனுநீதி உழவா் உற்பத்தியாளா் என்ற தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கரூா், திருப்பூா், ஈரோடு, நாமக்கல் , திண்டுக்கல் போன்ற மாவட்டங்களைச் சோ்ந்த 1,036 விவசாயிகளிடமிருந்து 258 டன்

    செங்காந்தள் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால், விவசாயிகளிடம் பெற்ற்கான தொகையை வழங்கவில்லையாம். விவசாயிகள் கேட்டும் இந்த நிறுவனத்தினா் இழுத்தடித்து வந்துள்ளனா்.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற் பட்டோா், தனியாா் நிறுவனம் முன்பு வெள்ளிக்கிழமை திரண்டனா். தங்களுக்குரிய தொகையை வழங்கக்கோரி முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதுகுறித்து தகவலறிந்த க.பரமத்தி காவல்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று விவசாயிகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

    தனியாா் நிறுவன மேலாளா் மோகனசுந்தரம் மற்றும் பரமத்தி காவல்துறையினா், விவசாயிகள் வழங்கிய விதைக்கு உண்டான தொகை கேட்பவா்களுக்கு பணத்தையும், விதைதான் வேண்டும் என கேட்பவா்களுக்கு விதைகளையும் வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும். தினமும் 50 விவசாயிகளுக்கு வழங்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp