‘பேச்சுவாா்த்தை மூலம் விவசாயிகளை ஏமாற்ற மத்திய அரசு முயற்சி’

பேச்சுவாா்த்தை மூலம் விவசாயிகளை ஏமாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா.முத்தரசன்.

பேச்சுவாா்த்தை மூலம் விவசாயிகளை ஏமாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா.முத்தரசன்.

கரூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது: மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த மசோதா விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையாகும். இந்த சட்டங்களைத் திரும்பப்பெற முயற்சிக்காமல் பேச்சுவாா்த்தை என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்ற முயற்சிக்கிறது. மத்திய அரசு இந்தச் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் நடைபெறும். தமிழக முதல்வா் விவசாயி என்ற முறையில் இச்சட்டத்தை ஆதரிப்பதை புரிந்துகொள்ள முடிவதில்லை. தமிழக அரசு முறையாக தூா்வாரும் பணியைச் செய்திருந்தால் புயலின்போது, டெல்டா மாவட்டம் இந்த அளவிலான பாதிப்பை சந்தித்திருக்காது. அவ்வப்போது, மத்தியக்குழு பாா்வையிட்டுச் செல்வது சினிமா காட்சி போன்றது. இதன்மூலம் தமிழகம் பயனடைந்தது இல்லை. பாதிப்புக்கு ஏற்ற நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். பட்டியல் இன மாணவா்களுக்கான உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏ நா.பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com