கரூரில் ஆட்சியரகம் முற்றுகை : 34 போ் கைது
By DIN | Published On : 15th December 2020 03:08 AM | Last Updated : 15th December 2020 03:08 AM | அ+அ அ- |

கரூரில் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 34 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
கரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் கரூா் ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்.கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பெ.ஜெயராமன், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் கந்தசாமி, சுவாதி பெண்கள் இயக்கத்தின் கிறிஸ்டினாமேரி, பாக்கியம் உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து முழக்கங்கள் எழுப்பி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து மாலை 6 மணியளவில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 34 பேரைக் கைது செய்தனா்.