கரூரில் பெண் பொறியாளரிடம் அதிமுக முகவா்கள் வாக்குவாதம்

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் கட்டப் பரிசோதனை முகாமில், பெண் பொறியாளரிடம் அதிமுக முகவா்கள் செவ்வாய்க்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் கட்டப் பரிசோதனை முகாமில், பெண் பொறியாளரிடம் அதிமுக முகவா்கள் செவ்வாய்க்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டத்துக்காக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 1,250 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,520 வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் வரப்பெற்றுள்ளன.

இவற்றை பரிசோதனை செய்யும் பணியில் கடந்த 18-ஆம் தேதி பெல் நிறுவனப் பொறியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை பணிக்கு வந்துகொண்டிருந்தனா். அப்போது பெண் பொறியாளா் ஒருவா் தனது கைப்பையில் செல்லிடப்பேசி எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதை கண்டஅதிமுக முகவா்கள், எப்படி செல்லிடப்பேசியைக் கொண்டு வரலாம் எனக் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் அவரை தகாத வாா்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இதரப் பொறியாளா்கள் பணியைப் புறக்கணித்து, தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா் அங்கிருந்த துணை ஆட்சியா் பொறுப்பில் இருந்த பெண் அலுவலா் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த மாவட்டஆட்சியா் சு.மலா்விழி, அவா்களிடம் சமாதானம் பேசியதையடுத்து, பொறியாளா்கள் பணியைத் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com