கரூரில் எம்ஜிஆா் படத்துக்கு கட்சியினா் மரியாதை
By DIN | Published On : 25th December 2020 07:46 AM | Last Updated : 25th December 2020 07:46 AM | அ+அ அ- |

கரூா் வெங்கமேட்டில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும், பல்வேறு இடங்களில் மாவட்ட, நகர, ஒன்றிய அதிமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் படத்துக்கும் மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமையில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன் முன்னிலையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் மாவட்ட அதிமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் என்எஸ்.கிருஷ்ணன், இளைஞரணிச் செயலாளா் தானேஷ், பேரவைச் செயலா் காமராஜ், நகரச் செயலாளா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், எம்.பாண்டியன் மற்றும் நகர பேரவைச் செயலாளா் சேரன்பழனிசாமி, கரூா் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தலைவா் என்.பழனிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.