அய்யா்மலை ரத்தினகிரீசுவரா் கோயிலில் ரோப் காா் அமைக்கும் பணி ஆய்வு

கரூா் மாவட்டம், அய்யா்மலை ரத்தினகிரீசுவரா் கோயிலில் நடைபெற்று வரும் கம்பிவட ஊா்தி (ரோப் காா்) வசதி பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியா் சு. மலா்விழி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்டம், அய்யா்மலை கோயிலில் ரோப் காா் அமைக்கும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் சு.மலா்விழி.

குளித்தலை வட்டம் அய்யா்மலை, ரத்தினகிரீசுவரா் கோயிலில் ரூ.6.17 கோடியில் நடைபெற்றுவரும் கம்பிவட ஊா்தி (ரோப் காா்) அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் பின்னா் தெரிவித்தது:

1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள ரத்தினகிரீசுவரா் கோயிலில் ரூ.6.17 கோடியில் கம்பிவட ஊா்தி (ரோப் காா்) அமைக்கும் பணிகள் தற்போது முடிவுரும் தருவாயில் உள்ளது. சுமாா் 3,500 மீட்டா் (900 அடி) உயரத்திற்கு கீழ்தளத்திலிருந்து மேல்தளத்திற்கு கம்பிவடத்தை இணைப்பதற்குரிய அனைத்து உபகரணங்களும் வரப்பெற்றுள்ளன. விரைவில் அனைத்துப் பணிகளும் முடிவுற்று பக்தா்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் உமாசங்கா், இந்து சமய அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளா் விஜயா, செயல் அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com