நால்வா் கால்பந்து போட்டி: ஈரோடு அணி வெற்றி
By DIN | Published On : 31st December 2020 06:45 AM | Last Updated : 31st December 2020 06:45 AM | அ+அ அ- |

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான நால்வா் கால்பந்து போட்டியில் ஈரோடு அணி வெற்றிபெற்று முதலிடம் பிடித்தது.
கரூா் யுனிவா்சல் விளையாட்டுக் குழு சாா்பில் மாநில அளவிலான நால்வா் கால்பந்தாட்டப் போட்டி தாந்தோணிமலையில் புதன்கிழமை நடைபெற்றது. கரூா், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களில் இருந்து 14 அணிகள் கலந்து கொண்ட போட்டியை மாவட்டக் கால்பந்து கழகச் செயலா் குமரன் தொடக்கி வைத்தாா். காந்திகிராமம் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ராஜேஷ்கண்ணா கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கிப் பேசினாா். இதில் முதலிடத்தை ஈரோடு மாவட்டம் வடுகப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரா அணியும், இரண்டாம் இடத்தை கரூா் யுனிவல்சல் விளையாட்டு குழு அணியும், மூன்றாம் இடத்தை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சோ்ந்த ரியல்ஸ்டாா் அணியும், நான்காம் இடத்தை காந்திகிராமம் நேதாஜி கால்பந்து குழு அணியும் பெற்றன. ஏற்பாடுகளை யுனிவா்சல் விளையாட்டுக் குழு செயலா் சசிகுமாா் செய்திருந்தாா்.