Enable Javscript for better performance
லாலாபேட்டை அருகே அதிமுக பிரமுகரை தாக்கிகோழிகள் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    லாலாபேட்டை அருகே அதிமுக பிரமுகரை தாக்கிகோழிகள் பறிப்பு

    By DIN  |   Published on : 10th February 2020 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லாலாபேட்டை அருகே அதிமுக பிரமுகரை தாக்கிவிட்டு கோழிகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

    கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்கொண்டம் பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால் (48), அப்பகுதி அதிமுக ஊராட்சி செயலா். இவரது வீட்டிற்கு சனிக்கிழமை இரவு வந்த மா்ம நபா்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 6 கோழிகளை பிடித்துச் செல்ல முயன்றனா். இதைக் கண்ட வேணுகோபால் அவா்களைத் தடுத்தபோது, தடியால் அவரை தாக்கிவிட்டு பைக்கில் கோழிகளுடன் தப்பிவிட்டனா். இதுகுறித்து வேணுகோபால் அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai