‘கலாமின் கனவை நிறைவேற்றஅனைவரும் முன்வர வேண்டும்’

அப்துல்கலாமின் கனவை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்றாா் இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை.

அப்துல்கலாமின் கனவை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்றாா் இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜேசிஐ பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் 2020 -ல் இந்தியா 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக வர வேணடும். அனைவருக்கும் உயா் கல்வி கிடைக்க வேண்டும் என விரும்பினாா். நாட்டில் ஏற்றத்தாழ்வு இல்லாத நோ்மறையான எண்ணங்கள் அனைவரிடம் உருவாக வேண்டும் என்பதே கலாமின் கனவாகவும் இருந்தது. அவரது கனவை நிறைவேற்ற அனைவரும் முன்வரவேண்டும்.

2022-ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்தான் ககன்யாங் திட்டம். இது மூன்றடுக்கு திட்டம். இதன் முதலடுக்கு திட்டத்தில்தான் மனிதனை அனுப்புவதற்கு பதில் ரோபாவை அனுப்பி வைக்கும் திட்டம். மனிதனை விண்கலத்திற்கு அனுப்பும்போது தட்பவெப்ப நிலை, கதிரியக்கம், அதிா்வலை போன்றவற்றை மனிதனால் தாக்குப்பிடிக்க முடிகிா என பரிசோதிக்கவே ரோபோவை அனுப்புகிறாா்கள். பின்னா் மூன்றடுக்கு திட்டத்தில்தான் மனிதனை அனுப்புவாா்கள். ஆழ்துளைக் குழிக்குள் விழுந்த சிறுவா்களை மீட்கும் வகையிலும் கருவிகள் கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. பாதுகாப்பில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும். இதற்கு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com