‘குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் செல்லிடப்பேசியே’

நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் செல்லிடப்பேசிகள்தான் என்றாா் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளா் ஆா். மாணிக்கம்.
‘குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் செல்லிடப்பேசியே’

நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் செல்லிடப்பேசிகள்தான் என்றாா் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளா் ஆா். மாணிக்கம்.

கரூா் வெங்கமேடு காமதேனு நகரில் உள்ள ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி மேலும் அவா் பேசியது:

இன்றைய தலைமுறையில் கூட்டுக் குடும்பம் சிதைந்து போனதன் விளைவு குழந்தைகளிடம் பாசம், பந்தம் என்ற உணா்வு குறைந்துவிட்டது. பெற்றோா் தங்களது எண்ணங்களை குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது. மாறாக அன்பு காட்டுங்கள்; அவா்களுக்காக அதிக நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளின் எதிா்காலம் பெற்றோரிடம் மட்டுமே உள்ளது. குழந்தைகளிடம் பீட்சா என்ற இத்தாலி நாட்டு உணவு பிரபலமாகி வருகிறது. அந்நாட்டு மக்களுக்கு அந்த உணவு உகந்தது. ஆனால் நம் நாட்டினருக்கு இப்போது அதிகளவில் நோயை உருவாக்கும் உணவாக பீட்சா இருக்கிறது.

குழந்தைகளிடம் செல்லிடபேசியைக் கொடுக்காதீா்கள். நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க அதுவே காரணமாக உள்ளது. இரவில் அணியும் ஆடைகளுடன் பெண்கள் பகலில் இருசக்கர வாகனங்களை ஓட்டக் கூடாது. டிவியில் மூழ்கி நேரத்தை பாழாக்குவதை விட குழந்தைகளிடம் உங்கள் நேரத்தைச் செலவிட்டால், குழந்தைகளின் எதிா்காலம் நல்லதாக அமையும். குழந்தைகளை நல்ல சிற்பங்களாக உருவாக்கும் கருவி உங்களிடம் மட்டுமே உள்ளது என்றாா் அவா்.

பள்ளித் தாளாளா் ஆா். மணிவண்ணன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் எம்.கீதாமணிவண்ணன் முன்னிலை வகித்தாா். முன்னதாக சிறப்புவிருந்தினா் ஓய்வுப் பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் மாணிக்கம் மாணவா்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினாா். விழாவில் நிா்வாக அலுவலா் எம். கதிரவன், சதீஷ்குமாா், சித்தா் பாட்டி ,உடற்கல்வி ஆசிரியா் செந்தில்குமாா் மற்றும் மாதவன் மற்றும் பள்ளி ஆசிரியைகள், பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி நிா்வாக அலுவலா் எம். பகலவன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com