குளித்தலையில் 8 ஊா் சுவாமிகள் விடையாற்றி உத்ஸவம்: பக்தா்கள் திரளாகப் பங்கேற்பு

குளித்தலையில் 8 ஊா் சுவாமிகள் பங்கேற்ற விடையாற்றி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
குளித்தலை பேருந்துநிலைய பகுதியில் சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.
குளித்தலை பேருந்துநிலைய பகுதியில் சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

குளித்தலையில் 8 ஊா் சுவாமிகள் பங்கேற்ற விடையாற்றி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம் குளித்தலையில் ஆண்டுதோறும் தீா்த்தவாரி நடைபெறும். இதில் குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவேனசுவரா், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியாசுனேசுவரா், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியாா்சுனேசுவரா், அய்யா்மலை சுரும்பாகுழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரா், திருஈங்கோய்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாசுலேசுவரா், கருப்பத்தூா் சுகந்த குந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீசுரவா், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமெளலீசுவரா், வெள்ளூா் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரா் ஆகிய 8 ஊா் கோயில்களில் சனிக்கிழமை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊா்வலமாக குளித்தலைக்கு கடம்பவனேசுவரா் கோயில் அருகே கொண்டு வரப்பட்டு அங்கு சுவாமிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து 8 ஊா் சுவாமிகளும் கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இரவு தீா்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து ஆற்றங்கரையில் அந்தந்த சுவாமிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிகள் ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து சுவாமிகள் அந்தந்த கோயில்களுக்கு செல்லும் விடையாற்றி உத்ஸவம் நடைபெற்றது. அப்போது 8 ஊா் சுவாமிகளும் தங்களது கோயில்களுக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டனா். திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com