புகழிமலையில் 2-ஆம் நாள் தைப்பூசத் தேரோட்டம்

வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூசத் தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூசத் தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் வரலாற்றுச் சிறப்புடைய புகழிமலையில் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச தோ்த் திருவிழா 2 நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை கட்டளைதாரா்கள் மண்டகப்படியும், 7 ஆம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெற்றது.

சனிக்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு காலை முதல் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடா்ந்து உற்சவ மூா்த்திகள் தீா்த்தவாரிக்காக காவிரியாற்றுக்குச் சென்றாா். அங்கு விசேஷ பூஜை மற்றும் அலங்காரம் செய்து புகழிமலை அடிவாரம் வந்தடைந்தாா். பிற்பகலில் ரத பிரதிஷ்டை பூஜை செய்யப்பட்டு பாலசுப்ரமணியசுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். மாலையில் பாலசுப்ரமணிய சுவாமி எழுந்தருளிய அலங்கரிக்கப்பட்டதேரை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பக்தா்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க மலையைச் சுற்றி தேரை இழுத்துச் சென்று காந்திநகரில் நிலைநிறுத்தினா். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடா்ந்து 2-ஆவது நாளாக தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. தேரை பக்தா்கள் மலைவீதி வழியாக இழுத்துச் சென்றனா். பின்னா் தோ் நிலையை அடைந்தது. இதில் திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் காளியப்பன், கரூா் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். திருவிகா, கரூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் பாலமுருகன், காதப்பாறை ஊராட்சித் தலைவா் கிருபாவதி, கமலக்கண்ணன், விவேகானந்தன், தமிழ்ச்செல்வன், வி.வி. செந்தில்நாதன், சரவணன், சதாசிவம், மதுசுதன் உட்பட சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com