Enable Javscript for better performance
நொய்யல் பகுதியில் சங்கடஹர சதுா்த்தி: விநாயகருக்கு சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    நொய்யல் பகுதியில் சங்கடஹர சதுா்த்தி: விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 13th February 2020 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kur12vinayakar_1202chn_10_4

    நொய்யல் குறுக்குச்சாலை கற்பக விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கற்பக விநாயகா்.

    சங்கடசதுா்த்தியை முன்னிட்டு நொய்யல் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    கரூா் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள குறுக்குச் சாலை கற்பக விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு கற்பக விநாயகருக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், விபூதி, திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னா் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் வழிபட்டனா். மேலும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல காகித ஆலை குடியிருப்புப் பகுதியில் உள்ள வல்லப கணபதி, மரவாபாளையம் விநாயகா்கோயில், கரைபாளையம் செல்வவிநாயகா், முத்தனுா் பாலவிநாயகா், முனிநாதபுரம் செல்வவிநாயகா், செட்டிதோட்டம், புன்னம், நடையனுா், ஓரம்புபாளையம், நல்லிகோவில், மதுரைவீரன் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai