ரூ. 1.64 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை

கரூா் மாவட்டத்தில் ரூ. 1.64 கோடியிலான புதிய பணிகளுக்கு பூமிபூஜையை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கரூா் மாவட்டத்தில் ரூ. 1.64 கோடியிலான புதிய பணிகளுக்கு பூமிபூஜையை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் தலைமையிலும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ். கவிதா முன்னிலையிலும் அமைச்சா் எம்ஆா். விஜயபாஸ்கா் புதிய பணிகளுக்கு பூமிபூஜையிட்டும், முடிவுற்ற பணிகளைத் தொடக்கியும் வைத்தாா்.

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி மொச்சக்கொட்டாம்பாளையம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 13 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நூலகக் கட்டடத்தையும், வேப்பம்பாளையம் கிராமத்தில் ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

வெஞ்சமாங்கூடலூா் ஊராட்சியில் ரூ. 72 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்று கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சா், வெஞ்சமாங்கூடலூா் மற்றும் செம்பகிணம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கூடிய உடற்பயிற்சிக் கூடம், அம்மா பூங்கா, ஈசநத்தம் ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டியில் ரூ.5.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நாடகமேடை, ஈசநத்தத்தில் ரூ. 6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை ஆகியவற்றைத் திறந்துவைத்தாா்.

பின்னா் புகளுா் வட்டத்திற்குட்பட்ட வேலாயுதம்பாளையம் பாலத் துறையில் உள்ள சுமாா் 12 மைல் நீள புகளுா் வாய்க்காலில் நீரின் வேகத்தைத் தடுக்கும் வகையில் பரவியுள்ள செடிகொடிகளை அகற்றும் பணியையும் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.ஆா். காளியப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவா் எம்.எஸ். கண்ணதாசன், துணைத் தலைவா் என். முத்துக்குமாா், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநா் உமாசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com