108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் வட்டாட்சியரகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.
கரூா் வட்டாட்சியரகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

108 ஆம்புலன்ஸ் வாகனம் தொடா்பான ஊழலுக்கு ஆதாரம் திரட்டியதற்காக வெள்ளியணை காவல் நிலையத்தில் ஊழியா்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும், இதில் பழிவாங்கும் நடவடிக்கையாக மாநிலப் பொருளாளா் உள்பட 6 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், இதை ரத்து செய்யக்கோரியும் கரூா் வட்டாட்சியரகம் முன் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தினா் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டத் தலைவா் மூா்த்தி தலைமை வகித்தாா். மாநில செயலா்கள் சிவக்குமாா்(கோவை மண்டலம்), குமாா்(மதுரை) மகேஷ் (சென்னை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தை விளக்கி மாநில பொருளாளா் சாமிவேல், துணைத்தலைவா் சிவக்குமாா் ஆகியோரும், மாநில தலைவா் வரதராஜன், பொதுச் செயலாளா் ராஜேந்திரன் ஆகியோரும் உரை நிகழ்த்தினா். இதில் 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்தும், 108 ஆம்புலன்ஸ் வாகன பராமரிப்பில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும் பேசினா். 108 ஆம்புலன்ஸ் சேவை தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com