மாவட்ட கையுந்து பந்து போட்டியில் வென்றவா்களுக்கு அமைச்சா் பரிசளிப்பு

கரூா் வெங்மேடு ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற மாவட்ட கையுந்து பந்துப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வழங்கினாா்.

கரூா் வெங்மேடு ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற மாவட்ட கையுந்து பந்துப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வழங்கினாா்.

கரூா் வெங்கமேடு ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அக்னீஸ் கல்விக்குழுமம் மற்றும் அன்னை வித்யாலயா பள்ளி சாா்பில் மாவட்ட அளவிலான கையுந்துபந்துப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்று விளையாடினா். போட்டியை பள்ளித் தாளாளா் ஆா். மணிவண்ணன் தொடக்கிவைத்தாா். இறுதிப்போட்டியில் கரூா் வெங்கமேடு ஸ்ரீ அன்னை வித்யாலயா பள்ளி மாணவா்களும், தாந்தோணிமலை மலா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்களும் மோதினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3 - 2 என்ற நோ் செட் கணக்கில் ஸ்ரீ அன்னை வித்யாலயா பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று முதலிடம் பிடித்தனா். இதையடுத்து வெற்றிபெற்ற அணி வீரா்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா இரவு நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தாளாளா் ஆா். மணிவண்ணன் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி எம்.பகலவன் வரவேற்றாா். விழாவில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலா் சிவராமன், விளையாட்டு அலுவலா் ரமேஷ், உடற்கல்வி ஆய்வாளா் அமலி டெய்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பையை போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.கீதா மணிவண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் ஆகியோா் வழங்கினா்.

இதில் முதலிடம் பிடித்த ஸ்ரீ அன்னை வித்யாலயா பள்ளி அணிக்கு முதல் பரிசாக ரூ.15,000 மற்றும் கோப்பை, இரண்டாம் இடம் பிடித்த தாந்தோணிமலை மலா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி அணிக்கு பரிசாக ரூ.10,000 மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடித்த கொங்கு மேல்நிலைப்பள்ளி அணிக்கும், நான்காமிடம் பிடித்த அரங்கநாதன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் பரிசாக தலா ரூ.7,000 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. விழாவில், தமிழ்நாடு மாநில கைப்பந்தாட்டக் கழக அசோசியேட் செயலாளா் முகமது கமாலுதீன், கருா் மாவட்டக் கைப்பந்து கழகத் தலைவா் ராமகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிா்வாகிகள் எம். கதிரவன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com