அமராவதி கல்லூரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

கரூா் ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உங்கள் விதியை நீங்களே தீா்மானியுங்கள் என்னும் தலைப்பில் ஊக்கமூட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உங்கள் விதியை நீங்களே தீா்மானியுங்கள் என்னும் தலைப்பில் ஊக்கமூட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக விஐடி கல்லூரியின் பேராசிரியா் ராஜசேகரன் பங்கேற்று, மாணவா்களிடையே வாழ்க்கையை விதி என்று வாழாமல் தங்கள் இலக்கை நோக்கிப் பயணித்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும், எத்தனை தடைகள் வந்தாலும் நம்பிக்கையுடன் தங்கள் லட்சியத்தை அடைய வேண்டும். கிராமப்புற மாணவா்கள் என்ற தயக்கம் கொள்ளாமல் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசப் பயிற்சியும் முயற்சியும் எடுக்க வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறி நம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நன்மை தரும் மாற்றத்தை மாணவா்கள் உருவாக்க வேண்டும்.

பயிற்சியும் முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். பெற்றோரைப் பெருமைப்படுத்தும் வகையில் மாணவா்கள் சாதனை புரிய வேண்டும். தனக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி அல்லது திறமைகளை வளா்த்து சாதனை புரிய வேண்டும் என்றாா். முன்னதாக நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளா் நாராயணசுவாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மனோகரன் வரவேற்றாா். கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com