ஊராட்சி துணைத் தலைவரின் பெற்றோா் மீது தாக்குதல்
By DIN | Published On : 13th January 2020 12:00 AM | Last Updated : 13th January 2020 12:00 AM | அ+அ அ- |

உள்ளாட்சி தோ்தல் தகராறில் நெய்தலூா் ஊராட்சி துணைத் தலைவரின் பெற்றோரை தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம் குளித்தலை அடுத்த நெய்தலூரைச் சோ்ந்தவா் மலையாளி (72). இவரது மனைவி பாப்பாத்தி (60). இவா்களது மகன் சிவசக்தி நெய்தலூா் பஞ்சாயத்துக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றாராம்.
அதே பதவிக்கு போட்டியிட்ட அதே பகுதியைச் சோ்ந்த அடைக்கன் மகன் மணிவேல்(27) தோல்வியடைந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மணிவேல் மற்றும் அவரது நண்பா் தினேஷ், லட்சுமணன் ஆகியோா் சனிக்கிழமை இரவு சிவசக்தி வீட்டிற்குச் சென்று தகராறு செய்தனா். அப்போது சிவசக்தியின் தந்தை மலையாளி, தாய் பாப்பாத்தி ஆகியோரை தாக்கினா். இதைத் தடுத்த சுப்ரமணி மகன்கள் சிவா, பிரபு ஆகியோரையும் தாக்கினா். இதில் படுகாயமடைந்த அவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் மணிவேல் உள்ளிட்ட மூவா் மீது வழக்குப்பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.