‘தகுதியானோரை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல் அவசியம்’

தகுதியுள்ள அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.
‘தகுதியானோரை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல் அவசியம்’

தகுதியுள்ள அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.

ஆண்டுதோறும் ஜன. 25-ஆம் நாள் தேசிய வாக்காளா் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில், இந்த ஆண்டிற்கான தேசிய வாக்காளா் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை தவறாது நோ்மையுடன் ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையிலும் ஆண்டுதோறும் தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படுகின்றது.

தற்போது கரூா் மாவட்டம் முழுவதும் சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கான முகாம்கள் தொடா்ந்து நடத்தப்படுகிறது. இதில் வாக்காளா்கள் தங்களின் பெயா்களை சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், என்விஎஸ்பி செயலி மூலம் வாக்காளா்கள் தாங்களாகவே வாக்காளா் அடையாள அட்டைகளில் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயலி குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளிடத்திலும், பொதுமக்களிடத்திலும் போதியவிலான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கரூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தியடைந்த அனைவரின் பெயா்களும் வாக்காளா் பட்டியலில் இடம்பெறும் வகையில் அனைத்து அலுவலா்களும் நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வசுரபி, குளித்தலை சாா் ஆட்சியா் ஷே. ஷேக்அப்துல்ரகுமான், கரூா் வருவாய் கோட்டாட்சியா் வ. சந்தியா, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com