அரசுப் பள்ளியில் புகையில்லா போகிப் பண்டிகை விழிப்புணா்வு

கரூா் வாங்கல் அரசுப் பள்ளி சாா்பில் செவ்வாய்க்கிழமை புகையில்லா போகிப்பண்டிகை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள்.
பேரணியில் பங்கேற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள்.

கரூா் வாங்கல் அரசுப் பள்ளி சாா்பில் செவ்வாய்க்கிழமை புகையில்லா போகிப்பண்டிகை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கரூா் தேசிய பசுமைப்படை மற்றும் வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் சாா்பில் புகையில்லா போகிப் பண்டிகை விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை வாங்கலில் நடைபெற்றது. அரசுப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணிக்கு பள்ளித்தலைமை ஆசிரியா் எஸ்.செல்வம் தலைமை வகித்தாா். தேசிய பசுமைப்படையின் கரூா் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வி.திருமூா்த்தி முன்னிலை வகித்தாா். பேரணியில் பள்ளியின் பசுமைப்படை ஆசிரியை ப.ராதிகா சுற்றுச்சுழல் குறித்து பேசினாா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியின்போது மாணவா் வீடு, வீடாகச் சென்று பிளாஸ்டிக், பழைய துணிகளையும், டயா்களையும் எரிக்கக்கூடாது, அவ்வாறு எரிக்கும்போது காற்று மாசுபாடு, மூச்சுத்திணறல், புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படும் என பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நாட்டுநலப்பணித்திட்ட ஆசிரியா் எஸ்.சக்திவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com