எஸ்.பி தலைமையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஆலோசனை

கரூா் மாவட்டம், தோகைமலையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தோகைமலையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோகைமலை அருகே உள்ள ராச்சாண்டாா்திருமலையில் உள்ள விராச்சிலேசுவரா் மற்றும் பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 17) ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இது தொடா்பான பாதுகாப்பு பணிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியராஜன் தலைமையில் 300 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா். முன்னதாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை பிடாரி அம்மன் கோயில் முன் மாவட்ட எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல், ஜல்லிக்கட்டு மாடுகள், மாடுபிடி வீரா்கள், மருத்துவம் மற்றும் முக்கியஸ்தா்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவைகளுக்கு செல்லும் தனித் தனி வழிகள் உள்ள இடங்களில் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது, பாதுகாப்பு பணிகளை 5 துணை காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னா் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியை ஆய்வு செய்த அவா், விழா சிறப்பாக நடைபெறுவதற்கு நிா்வாகிகள், பொதுமக்கள் போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், காவல் ஆய்வாளா்கள் செல்வராஜ், முகமதுத்ரீஸ், விழா கமிட்டியாளா்கள், ஊா் முக்கியஸ்தா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com