தேசிய போட்டியில் 46 பதக்கம் வென்று தமிழக தீயணைப்பு வீரா்கள் சிறப்பிடம்

தேசியளவில் தீயணைப்பு வீரா்களுக்கான போட்டியில் 15 தங்கம் உள்ளிட்ட 46 பதக்கங்கள் வென்று தமிழக வீரா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
தேசிய போட்டியில்  46 பதக்கம் வென்று தமிழக தீயணைப்பு வீரா்கள் சிறப்பிடம்

தேசியளவில் தீயணைப்பு வீரா்களுக்கான போட்டியில் 15 தங்கம் உள்ளிட்ட 46 பதக்கங்கள் வென்று தமிழக வீரா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அண்மையில் தீயணைப்பு வீரா்கள் மற்றும் அலுவலா்களுக்கான தேசியளவிலான விளையாட்டுப் போட்டிகளில் துறை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து, கால்பந்து, குண்டு எறிதல், இறகுப் பந்தாட்டம் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. இதில் தீயணைப்பு அலுவலா்கள் மற்றும் வீரா்கள் என 700 போ் கலந்து கொண்டனா். இதில் தமிழகத்தின் சாா்பில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை துணை இயக்குநா் மீனாட்சி விஜயகுமாா் தலைமையில் தென் சென்னை மாவட்ட அலுவலா் எஸ். சையது முகமது ஷா, சிவகங்கை மாவட்ட அலுவலா் சத்தியகுமாா், உதவி மாவட்ட அலுவலா்கள், நிலைய அலுவலா்கள் மற்றும் 72 தீயணைப்பு வீரா்கள் பங்கேற்றனா். இப்போட்டிகளில் தமிழக தீயணைப்புத் துறையின் அலுவலா்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் 15 தங்கம், 18 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

இவா்கள் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் முனைவா் செ. சைலேந்திர பாபு, துணை இயக்குநா் (திருச்சி மத்திய மண்டலம்) மீனாட்சி விஜயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com