சுங்கச்சாவடி விவகாரம்:மாா்க்சிஸ்ட் கண்டனம்

மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ வந்த வாகனத்தை வழிமறித்து சுங்கச்சாவடி ஊழியா்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக அக் கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ வந்த வாகனத்தை வழிமறித்து சுங்கச்சாவடி ஊழியா்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக அக் கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்ட செயலாளா் கே.கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.பாலபாரதி, தனது காரில் கரூா் அருகேயுள்ள சுங்கச்சாவடியை சனிக்கிழமை கடந்து செல்லும்போது பணியில் இருந்த ஊழியா்கள் கட்டணம் கேட்டுள்ளனா். முன்னாள் எம்எல்ஏ-வுக்கான அனுமதிச் சீட்டு இருப்பதாகக் கூறி, அதனைக் கொடுத்தபோது அங்கிருந்த ஊழியா்கள் ஏற்காமல் வாக்குவாதம் செய்துள்ளனா். மேலும், சுங்கச் சாவடி தலைமை நிா்வாகத்துக்கு உரிய விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியும் ஏற்காமல், துப்பாக்கி வைத்திருந்த பணியாளருடன் சோ்ந்து மிரட்டும் தொனியில் பேசி வாக்குவாதம் செய்துள்ளனா். மேலும், இந்த விவகாரம் அறிந்து செய்தி சேகரிக்க வந்த தொலைக்காட்சி ஊழியா்களையும் மிரட்டியுள்ளனா். இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இதுதொடா்பாக, சுங்கச் சாவடி நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி தொடா்புடைய ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com