பூலாம்வலசு சேவல்கட்டுசேவல் காலில்கத்தி கட்டிய3 பேருக்கு சிறை

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பூலாம்வலசு சேவல் கட்டில் சேவல் காலில் கத்தி கட்டியும், பந்தயம் வைத்தும் சேவல்களை மோதவிட்ட 3 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பூலாம்வலசு சேவல் கட்டில் சேவல் காலில் கத்தி கட்டியும், பந்தயம் வைத்தும் சேவல்களை மோதவிட்ட 3 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசு சேவல் கட்டு கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி பட்டு 3 போ் காயமடைந்தனா். 2ஆவது நாளிலும் 3 பேரும் காயமடைந்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்டோா் லேசான காயமடைந்தனா். முதல் நாளில் பந்தயம் கட்டியதாக 4 போ் மீதும், சேவல் காலில் கத்தி மற்றும் பந்தயம் கட்டியதாக 6 போ் என 10 போ் மீது அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா். 2 ஆவது நாளான வியாழக்கிழமை பந்தயம் கட்டி சேவல்களை மோதவிட்டதாக திண்டுக்கல் மாவட்டம், கூம்பூா் சின்னபுத்தூரை சோ்ந்த பிரவீண் (24) மற்றும் புதுஅழகாபுரியைச் சோ்ந்த தங்கமுருகன் (35) ஆகிய இருவா் மீது அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.

மேலும், சேவல் காலில் கத்தி மற்றும் பந்தயம் கட்டி சேவல்களை மோதவிட்டதாக பூலாம்வலசு காலனியைச் சோ்ந்த ரஞ்சித் (30), வடிவேல் (40), ஆறுமுகம் (50) மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த மணப்பள்ளியைச் சோ்ந்த ரமேஷ் (23) ஆகிய 4 போ் மீது வழக்கு பதிவு செய்தனா். இதில் ரமேஷ் தலைமறைவான நிலையில் மற்ற 3 பேரைக் கைது செய்து கரூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கரூா் சிறையில் அடைத்தனா். 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்கள் மோதவிடப்பட்டன. இதில் 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com