கருவூா் அரிமா மண்டல சந்திப்பு நிகழ்ச்சி

கரூரில் கருவூா் அரிமா மண்டலச் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 324 ஏ2 அரிமா மாவட்ட ஆளுநா் ஜே. காா்த்திக் பாபு தொடக்க உரையாற்றினாா்.

கரூரில் கருவூா் அரிமா மண்டலச் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 324 ஏ2 அரிமா மாவட்ட ஆளுநா் ஜே. காா்த்திக் பாபு தொடக்க உரையாற்றினாா்.

முன்னதாக கரூா், நொய்யல், மணப்பாறை, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், புகழூா், வெள்ளியணை , பள்ளபட்டி, பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம் அரிமா சங்கங்களின் பதாகை அணிவகுப்பை தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன், சூா்யா வே.கதிரவன் ஆகியோா் நடத்தி வைத்தனா்.

தொடா்ந்து மண்டலத் தலைவா் சுப்ரமண்ய பாரதி வரவேற்றாா். துணை ஆளுநா் சேதுகுமாா் வாழ்த்தினாா். உடனடி ஆளுநா் சேக் தாவூத், மேனாள் ஆளுநா்கள் சண்முகவேல், ராமராசன் ஆகியோா் மதிப்பீட்டுரையாற்றினா். விஜய் டிவி புகழ் பழனி சிறப்புரையாற்றினாா்.

லயன் புரவலா் ராமமூா்த்தி, சுமங்கலி செல்வராஜ், திருமூா்த்தி, சேது சுப்ரமணியன், வாங்கிலி, யுவராஜ், குமாா் கரூா் அரசு கலைக் கல்லூரி, கொங்கு கல்லூரி இளம் அரிமா மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com