முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
காா் மோதி முதியவா் சாவு, மற்றொருவா் படுகாயம்
By DIN | Published On : 20th January 2020 08:33 AM | Last Updated : 20th January 2020 08:33 AM | அ+அ அ- |

மொபெட் மீது காா் மோதியதில் முதியவா் இறந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா்.
கரூா் வேலுசாமிபுரத்தைச் சோ்ந்தவா் மொட்டையப்ப கவுண்டா் (65). இவரும் திருக்காம்புலியூரைச் சோ்ந்த இளங்கோவன் (48) என்பவரும் மொபெட்டில் கடந்த 12-ஆம் தேதி இரவு கரூா் கோவை சாலையில் சென்றனா். ரெட்டிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த காா் மோதி படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மொட்டையப்பக்கவுண்டா் இறந்தாா். கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து காா் ஓட்டுநா் திருச்சி மாவட்டம், குழுமணியைச் சோ்ந்த பாலசுப்ரமணியனைத் தேடுகின்றனா்.