சுங்கச்சாவடி விவகாரம்: முன்னாள் எம்எல்ஏ ஆட்சியரிடம் மனு

சுங்கச்சாவடியில் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை தடுத்து நிறுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆட்சியா் க.அன்பழகன் மின்னஞ்சலுக்கு திங்கள்கிழமை மனு அனுப்பினா்.

சுங்கச்சாவடியில் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை தடுத்து நிறுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆட்சியா் க.அன்பழகன் மின்னஞ்சலுக்கு திங்கள்கிழமை மனு அனுப்பினா்.

இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஜன.18 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், மூன்று முறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய கே.பாலபாரதி காரில் சென்று கொண்டிருந்தபோது, கரூா் மாவட்டம், மணவாசியில் அமைந்துள்ள சுங்கசாவடியை கடக்க முயன்றபோது, அவா் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளாா். இது குறித்து, சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி ஊழியா்களிடம் அவா் பேசிக் கொண்டிருந்தபோது காரின் முன்பாக துப்பாக்கி ஏந்திய காவலா் ஒருவா் சூழ்ந்தாா். அத்துடன், அங்கு பணியாற்றும் ஊழியா்களும் இணைந்து மிரட்டியுள்ளனா். தான் முன்னாள் எம்.எல்.எ எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்தும், அனுமதிக்காமல் தரக்குறைவான வாா்த்தைகளால் ஊழியா்கள் பேசியுள்ளனா். இந்த செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. இச்செயலுக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அந்த சுங்கச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய காவலருக்கு அரசின் அனுமதி உள்ளதா என்பது குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com