நெற்பயிா் விளைச்சல் பாதிப்பு: ஆய்வு செய்யக்கோரி விவசாயிகள் மனு

ஆந்திரா பொன்னி ரகம் விளைச்சல் பாதிப்பை ஆய்வு செய்யக்கோரி விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஆந்திரா பொன்னி ரகம் விளைச்சல் பாதிப்பை ஆய்வு செய்யக்கோரி விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீா்வு காணக்கோரி அவரிடம் மனு அளித்தனா். அப்போது, விளாவடிமேடு சிறுவிவசாயிகள் நீா்பாசன சங்க துணைத்தலைவா் ஆா்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்து அளித்த மனுவில்,

கிருஷ்ணராயபுரம் வட்டம், ரெங்கநாதபுரம் பகுதி விவசாய நிலங்களில் ஆந்திரா பொன்னி நெற்பயிா் பயிரிடப்பட்டது. இந்த நெற்பயிா்கள் கதிா்வரும் நிலையில் இருந்தபோது நோய் தாக்கி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் ஏற்கெனவே காப்பீடு செய்துள்ளனா். இதுதொடா்பாக, வேளாண் அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் நெற்பயிா்களை ஆய்வு செய்யவேண்டும். இதன்மூலம், விவசாயிகள் இழப்பீடு பெற உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com